♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
எதற்ககாக சொன்னாயடி
எதற்ககாக சொன்னாயடி
என் காதல்
பொய்யென்று?
பிடிக்கவில்லை என்றால்
பிரிந்திருப்பேனடி!
பொய்யென்றால்
பொறுத்து கொள்வேனா?
புரியவில்லை உனக்கு
என் காதல் நேசம்
அறியவில்லை நீயும் – என்
கதால் மெய்மை….
கல்லூரி காலமதில்
கனிய கனிய பேசுவாயே?
காதல் என்று நான் எண்ணி-உன்
கால சுத்தி நின்றேன்!
கணக்கெழுதி நீ
கசிக்கிபோட்ட பெப்பரெல்லம்
என் கண்ணாடி அலுமாரியில்
தினம் என் காட்சிக்காய்
காத்துக்கிடக்குதடி!
நீ தொலச்ச தினக்குறிப்பு
என் நெஞ்சில் தினம்
தாலாட்டு பாடுதடி!
உன் கை பட்ட பொருலெல்லம்
என் அறையில் தஞ்சமடி!
நான் மட்டும் ஏனொ
நடுக்கடலில் துரும்பாக….
உனக்காக தினமும்
தரிசனங்கள் கோடியடி!
பொய்யென்று சொல்லாதே
பொறுக்காது என் நெஞ்சமடி!
என் ஜீவன் வாழுதடி
உன் காதல் நினைவினிலே!
பொய்யென்று சொன்னால்
மரணிப்பது காதலுடநென்
ஜீவனும்தான்…….
No comments:
Post a Comment