Friday, September 23, 2011

துரோகி

என் நிழலாக வராதே!

நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..
 
நினைப்பது நான் தான்
நீயில்லை..
 
மறந்தது நீ தான்
நானில்லை..
 
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் உன்னை போன்ற
ஒரு நம்பிக்கை துரோகியை
நான் சந்திக்க கூடாது,
 
என தினம் தினம் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்..

பிரிந்து விடுவோம்

நீ

எதை சொன்னாலும்

அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில்..

திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...

கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற

வார்த்தையை..??

ஏமாற்றம்

அகரம் முதல் இன்றைய
அறிவியல் வரை
சொல்லித்தர பள்ளிகள்
முதல் பல்கலைகழகங்கள் வரை
ஏட்டு சுரக்காய்கள்
எண்ணற்றவை உண்டு
எங்குண்டு
ஏமாற்றத்தை தாங்கி கொள்ள
கற்றுத் தரும் கல்விக் கழகங்கள்
அதிலும் ஏமாற்றம் தான்

பொய் காதல் உயிர் வாழுமோ!!

புன்னகையில் தீ மூட்டி போனாவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
அன்பே என் பூமியே முள்ளானதே
அய்யோ என் காற்று எல்லாம் நஞ்சானாதே
என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
அன்பே மெய் என்பதே பொய்யாகினால்
அய்யோ பொய் என்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ!!!!!

♥ broken Love Quotes Sad Sayings About what is Love♥

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
எதற்ககாக சொன்னாயடி
என் காதல்
பொய்யென்று?

பிடிக்கவில்லை என்றால்
பிரிந்திருப்பேனடி!
பொய்யென்றால்
பொறுத்து கொள்வேனா?

புரியவில்லை உனக்கு
என் காதல் நேசம்
அறியவில்லை நீயும் – என்
கதால் மெய்மை….

கல்லூரி காலமதில்
கனிய கனிய பேசுவாயே?
காதல் என்று நான் எண்ணி-உன்
கால சுத்தி நின்றேன்!

கணக்கெழுதி நீ
கசிக்கிபோட்ட பெப்பரெல்லம்
என் கண்ணாடி அலுமாரியில்
தினம் என் காட்சிக்காய்
காத்துக்கிடக்குதடி!

நீ தொலச்ச தினக்குறிப்பு
என் நெஞ்சில் தினம்
தாலாட்டு பாடுதடி!

உன் கை பட்ட பொருலெல்லம்
என் அறையில் தஞ்சமடி!
நான் மட்டும் ஏனொ
நடுக்கடலில் துரும்பாக….

உனக்காக தினமும்
தரிசனங்கள் கோடியடி!
பொய்யென்று சொல்லாதே
பொறுக்காது என் நெஞ்சமடி!

என் ஜீவன் வாழுதடி
உன் காதல் நினைவினிலே!
பொய்யென்று சொன்னால்
மரணிப்பது காதலுடநென்
ஜீவனும்தான்…….